சின்னமனூர் அருகேமலைமாடுகள் கண்காட்சி


சின்னமனூர் அருகேமலைமாடுகள் கண்காட்சி
x
தினத்தந்தி 22 Sep 2023 6:45 PM GMT (Updated: 22 Sep 2023 6:45 PM GMT)

சின்னமனூர் அருகே உள்ள சின்னஓவுலாபுரம் கிராமத்தில் கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில், மலைமாடுகள் கண்காட்சி நடந்தது.

தேனி

சின்னமனூர் அருகே உள்ள சின்னஓவுலாபுரம் கிராமத்தில் கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில், மலைமாடுகள் கண்காட்சி நடந்தது. தேனி மற்றும் சுற்றுப்புற மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி கிராமங்களில் அதிகமாக வளர்க்கப்படும் பாரம்பரியமான நாட்டு மலைமாடுகளை பாதுகாப்பது மற்றும் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தில் பதிவு செய்யப்பட்ட இனமாக மலைமாடுகளை அங்கீகரிப்பதற்காக இந்த முயற்சியாகவும் இந்த கண்காட்சி நடந்தது. கண்காட்சியை மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

இதில் ஏராளமான மலைமாடுகள் காட்சிக்காக நிறுத்தப்பட்டு இருந்தன. அவற்றை பொதுமக்கள், விவசாயிகள் பார்வையிட்டனர். கண்காட்சியின் ஒரு பகுதியாக கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. இதில், சின்னமனூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் நிவேதா, கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் டென்சிங் ஞானராஜ், தேனி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் ரிச்சர்டு ஜெகதீசன், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் அன்பழகன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


Related Tags :
Next Story