சின்னசேலம் அருகே மகள் இறந்த சோகத்தில் தாய் விஷம் குடித்து தற்கொலை


சின்னசேலம் அருகே  மகள் இறந்த சோகத்தில் தாய் விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 6 Dec 2022 6:45 PM GMT (Updated: 6 Dec 2022 6:46 PM GMT)

சின்னசேலம் அருகே மகள் இறந்த சோகத்தில் தாய் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

கள்ளக்குறிச்சி

சின்னசேலம்,

சின்னசேலம் அருகே பெத்தாசமுத்திரம் மேற்கு காட்டுக்கொட்டாயை சேர்ந்தவர் கருப்பையா (வயது 53). இவருடைய மனைவி செல்லம் (48). இவர்களுயை மகள் பவித்ரா. இவர் தத்தாதிரிபுரம் கிராமத்தை சேர்ந்த பாண்டியன் என்பவரை காதலித்து கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் கணவன்-மனைவிக்கிடையே ஏற்பட்ட தகராறில் பவித்ரா, வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து தன் மீது ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். மகள் இறந்த வேதனையில் தாய் செல்லம் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 4-ந்தேதி செல்லம், வீட்டில் விஷம் குடித்து விட்டார். மயங்கிய நிலையில் கிடந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி செல்லம் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்போில் கீழ்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story