குன்னூர் அருகே மரத்தில் தென்பட்ட மரநாய்
குன்னூர் அருகே மரத்தில் மரநாய் தென்பட்டது.
நீலகிரி
குன்னூர்: குன்னூர் பகுதியில் உள்ள வனப்பகுதிகளில் சிறுத்தை, காட்டு யானை, கரடி, கடமான், குரங்குகள் மற்றும் மரநாய் உள்பட அரியவகை விலங்குகள் அதிகமாக உள்ளன. இதனால் இவ்விலங்குகள் குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதை சாலையில் அவ்வப்போது உலா வருவதும், சுற்றுலா பயணிகளின் கண்ணில் தென்படுவதும் வழக்கம். இந்த நிலையில் குன்னூர் அருகே தீயணைப்பு அலுவலகம் உள்ள பகுதியில் நிற்கும் ஒரு மரத்தில் மரநாய் ஒன்று ஏறி நின்றபடி இருந்தது. இதனை பார்த்த உள்ளூர் மக்கள், சுற்றுலா பயணிகள் போட்டி போட்டுக்கொண்டு மரநாயை தங்களது செல்போனில் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். ஒருகட்டத்திற்கு பிறகு மரநாயை பார்க்க மக்கள் அதிகம் கூடியதை தொடர்ந்து மரநாய் வனப்பகுதிக்குள் ஓடிச் சென்றுவிட்டது.
Related Tags :
Next Story