கூடலூர் அருகே3,500 வாழை மரங்கள் முறிந்து சேதம்


கூடலூர் அருகே3,500 வாழை மரங்கள் முறிந்து சேதம்
x
தினத்தந்தி 27 March 2023 6:45 PM GMT (Updated: 27 March 2023 6:47 PM GMT)

கூடலூர் பகுதியில் காற்றுடன் பலத்த மழை பெய்ததால் 3,500 வாழை மரங்கள் முறிந்து நாசமாகின.

தேனி

கூடலூர், குள்ளப்பகவுண்டன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி ஆகிய பகுதிகளில் நேற்று அதிகாலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. பின்னர் மாலையில் வெயிலின் தாக்கம் குறைந்து மழை பெய்யத் தொடங்கியது. மழை பெய்து கொண்டிருந்தபோது சூறாவளி காற்று வீசத் தொடங்கியது. இந்த சூறாவளி காற்றில் கருநாக்கமுத்தன்பட்டி மயான சாலை பகுதிகளில் உள்ள ஒரு தோட்டத்தில் சாகுபடி செய்திருந்த 3,500-க்கும் மேற்பட்ட செவ்வாழை மரங்கள் முறிந்து விழுந்து சேதமடைந்தன. மேலும் அந்தப் பகுதிகளில் உள்ள மரங்கள் சாய்ந்து மின்கம்பங்கள் கீேழ விழுந்தன. இதன் காரணமாக மின்தடை ஏற்பட்டது.


Next Story