கூடலூர் அருகே லாட்டரி சீட்டுகள் கடத்தியவர் சிக்கினார்


கூடலூர் அருகே  லாட்டரி சீட்டுகள் கடத்தியவர் சிக்கினார்
x

கூடலூர் அருகே லாட்டரி சீட்டுகள் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்

தேனி

கேரள மாநிலம் குமுளி, வண்டிப்பெரியார், கட்டப்பனை ஆகிய பகுதிகளில் இருந்து தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை சிலர் மொத்தமாக வாங்கி தமிழகத்திற்கு கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் லோயர்கேம்ப் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் தலைமையில் போலீசார், லோயர்கேம்ப் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டு அந்த வழியாக வந்த பஸ்களை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது ஒரு பஸ்சில் கம்பம்மெட்டு காலனியைச் சேர்ந்த ஆரிப் அகமது (வயது 47) என்பவர், லாட்டரி சீட்டுகளை பையில் மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசாா் அவரை கைது செய்தனர். மேலும் 960 லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

1 More update

Next Story