தேவதானப்பட்டி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; அ.தி.மு.க. கிளை செயலாளர் பலி
தேவதானப்பட்டி அருகே மோட்டார்சைக்கிள்கள் மோதிய விபத்தில் அ.தி.மு.க. கிளை செயலாளர் பரிதாபமாக இறந்தார்
தேவதானப்பட்டி அருகே உள்ள நடுப்பட்டியை சேர்ந்தவர் ஜெயபாண்டி (வயது 45). நடுப்பட்டி அ.தி.மு.க. கிளை செயலாளராக இருந்தார். இந்நிலையில் கடந்த 4-ந்தேதி இவர் சிந்துவம்பட்டியில் இருந்து மோட்டார்சைக்கிளில் ஜெயமங்கலத்திற்கு வந்து கொண்டிருந்தார்.
சிந்துவம்பட்டி இரட்டை கோவில் அருகே சென்றபோது வடுகபட்டியை சேர்ந்த பாண்டியராஜன் (48) ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது இவரது மோட்டார்சைக்கிள் நேருக்கு நேர் மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த 2 பேரும் படுகாயமடைந்தனர். பின்னர் அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஜெயபாண்டி மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஜெயமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.