ஈரோடு அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.10 லட்சம் கஞ்சா பறிமுதல் 2 வாலிபர்கள் கைது


ஈரோடு அருகே    வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.10 லட்சம் கஞ்சா பறிமுதல்    2 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 19 Oct 2023 3:23 AM IST (Updated: 19 Oct 2023 3:25 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு அருகே வீட்டில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பதுக்கி வைத்திருந்ததாக 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனா்.

ஈரோடு

ஈரோடு அருகே ரூ.10 லட்சம் மதிப்புள்ள கஞ்சாவை வீட்டில் பதுக்கி வைத்திருந்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

கஞ்சா விற்பனை

ஈரோடு அருகே உள்ள சோலார் பகுதியில் வீட்டில் பதுக்கி வைத்து கஞ்சா விற்பனை நடைபெறுவதாக ஈரோடு மதுவிலக்கு போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சோலார் பாலுசாமி நகர் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது அங்குள்ள ஒரு வீட்டில் இருந்து வாலிபர் ஒருவர் சந்தேகப்படும்படியாக வெளியே வந்தார். மேலும் அவர் போலீசாரை பார்த்ததும் அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்றார். உடனே போலீசார் அவரை மடக்கி பிடித்ததோடு, அதிரடியாக அந்த வீட்டுக்குள் நுழைந்து சோதனையில் ஈடுபட்டனர்.

2 வாலிபர்கள் கைது

சோதனையின்போது வீட்டில் கஞ்சா பொட்டலங்களாக கட்டப்பட்டு பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் வீட்டில் இருந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், அதே பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் (வயது 31) என்பதும், அவர் ஈரோடு வெண்டிப்பாளையம் பகுதியை சேர்ந்த கவுதம் (24) என்பவருடன் சேர்ந்து தனது வீட்டில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தமிழ்ச்செல்வன் மற்றும் கவுதமை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.10 லட்சம் மதிப்பிலான 50 கிலோ கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.


Next Story