எட்டயபுரம் அருகே காரில் கடத்திய 28 மூட்டைரேஷன் அரிசி பறிமுதல்


எட்டயபுரம் அருகே காரில் கடத்திய 28 மூட்டைரேஷன் அரிசி பறிமுதல்
x
தினத்தந்தி 19 July 2023 12:15 AM IST (Updated: 19 July 2023 4:38 PM IST)
t-max-icont-min-icon

எட்டயபுரம் அருகே காரில் கடத்திய 28 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

தூத்துக்குடி

எட்டயபுரம்:

எட்டயபுரம் அருகே உள்ள மாசார்பட்டி போலீசார் நேற்று முன்தினம் இரவு அச்சங்குளம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 28 மூட்டைகளில் 1,120 கிலோ ரேஷன் அரிசி சட்டவிரோதமாக கடத்தியது தெரியவந்தது. உடனே அந்த ரேஷன் அரிசி மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் நடத்திய விசாரணையில், காரை ஓட்டி வந்தவர் தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் பகுதியைச் சேர்ந்த சண்முகராஜ் மகன் ராசுகுட்டி (வயது 28) என்பது தெரிய வந்தது. இதுகுறித்து மாசார்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து, 28 மூட்டை ரேஷன் அரிசி, கார் ஆகியவற்றை தூத்துக்குடி குடிமை பொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய்வுத் துறை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.


Next Story