கள்ளிப்பட்டி அருகே ஜெராக்ஸ் கடையில் தீ விபத்து


கள்ளிப்பட்டி அருகே ஜெராக்ஸ் கடையில் தீ விபத்து
x

கள்ளிப்பட்டி அருகே ஜெராக்ஸ் கடையில் தீ விபத்து நடந்தது.

ஈரோடு

டி.என்.பாளையம்

டி.என்.பாளையம் கள்ளிப்பட்டி கொண்டையம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சாமிநாதன் (வயது 45). இவர் பஸ் நிறுத்தம் அருகே ஜெராக்ஸ் கடை வைத்து நடத்தி வருகிறார். சாமிநாதன் நேற்று காலை வழக்கம்போல் கடையை திறந்து பணியில் இருந்து உள்ளார். இந்த நிலையில் மதியம் அவர் அருகே உள்ள டீக்கடைக்கு சென்று விட்டு வந்தார்.

அப்போது கடைக்குள் புகை மூட்டமாக இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது அங்கிருந்த கணினி, பிரிண்டர், ஜெராக்ஸ் எந்திரம், நோட்டு, புத்தகங்கள் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து கொண்டு இருந்தது. உடனே இதுகுறித்து அவர் கோபி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார்.

அதைத்தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று கடையில் எரிந்த தீயை தண்ணீரை பீய்ச்சியடித்து அணைத்தனர். எனினும் இந்த தீ விபத்தில் கடையில் உள்ள பொருட்கள் முற்றிலும் எரிந்து நாசமானது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்த தீ விபத்து குறித்து பங்களாப்புதூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story