கோபி அருகேஅரசு பஸ் சக்கரத்தில் சிக்கி தனியார் நிறுவன ஊழியர் பலி


கோபி அருகேஅரசு பஸ் சக்கரத்தில் சிக்கி தனியார் நிறுவன ஊழியர் பலி
x

கோபி அருகே அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி தனியார் நிறுவன ஊழியர் பலியானார்.

ஈரோடு

கடத்தூர்

கோபி அருகே அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி தனியார் நிறுவன ஊழியர் பலியானார்.

தனியார் நிறுவன ஊழியர்

கோபி அருகே உள்ள காளியண்ணன் விரிவாக்க வீதியைச் சேர்ந்தவர் கங்காதரன். இவருடைய மகன் நவீன் (வயது 28). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று சொந்த வேலை காரணமாக மோட்டார்சைக்கிளில் சத்தியமங்கலம் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். லக்கம்பட்டி பிரிவு அருகே சென்று கொண்டிருந்தபோது முன்னால் சென்று கொண்டிருந்த அரசு பஸ்சை முந்த முயற்சித்தார். அப்போது எதிரே வந்த வாகனத்தை பார்த்தவுடன் மோட்டார்சைக்கிளை நிறுத்தினார்.

பலி

இதில் எதிர்பாராதவிதமாக மோட்டார்சைக்கிளுடன் அரசு பஸ்சின் பின் சக்கரத்தில் நவீன் சிக்கி கொண்டார். இதில் அவர் மீது அரசு பஸ் சக்கரம் ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து தகவல் கிடைத்ததும் கோபி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று நவீனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அரசு பஸ்சை ஓட்டிவந்த சத்தியமங்கலத்தை சேர்ந்த வடிவேல் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story