அரசு ஆஸ்பத்திரி அருகே வேகத்தடை அமைக்கப்படுமா?


அரசு ஆஸ்பத்திரி அருகே வேகத்தடை அமைக்கப்படுமா?
x

மன்னார்குடி சாலையில் அரசு ஆஸ்பத்திரி அருகே வேகத்தடை அமைக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

திருவாரூர்

மன்னார்குடி:

மன்னார்குடி சாலையில் அரசு ஆஸ்பத்திரி அருகே வேகத்தடை அமைக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

காந்தி ரோடு

மன்னார்குடி சாலையில் மகாமாரியம்மன் கோவில் தெரு, காந்தி ரோடு சாலை போக்குவரத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த சாலை ஆகும். இதில் மகா மாரியம்மன் கோவில் தெரு வழியாகத்தான் திருவாரூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, திருமக்கோட்டை மற்றும் மன்னார்குடி கிழக்குப்பகுதி உள்ளிட்ட பகுதிக்கு செல்லும் வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் சென்று வருகின்றனர்.

இந்த சாலையில் காந்தி ரோடு இணையும் பகுதியில் அரசு ஆஸ்பத்திரி, மன்னார்குடி நகராட்சி அலுவலகம் ஆகியவை உள்ளது. இதனால் எப்போதும் இந்த சாலை வாகன நெரிசலுடன் காணப்படும்.

வேகத்தடை

போக்குவரத்து அதிகமாக இருக்கும் இந்த சாலையில் காந்தி ரோடு சந்திப்பில் வேகத்தடை இல்லாமல் உள்ளது. இதனால் அந்த சந்திப்பில், காந்தி ரோட்டில் இருந்து வரும் வாகனங்களும், மகா மாரியம்மன் கோவில் தெருவில் செல்லும் வாகனங்களும் அடிக்கடி மோதி விபத்து ஏற்படுகிறது.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இந்த காந்தி ரோடு சந்திப்பில் வேகத்தடை அமைத்தால் விபத்துக்கள் குறையும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

போக்குவரத்து நெரிசல்

இதுகுறித்து தேசிய சட்ட உரிமைகள்கழக மாநில துணைத்தலைவர் கார்த்திகேயன் கூறியதாவது:-மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரி அருகே மகாமாரியம்மன் கோவில் காந்திரோடு சந்திக்கும் இடம் போக்குவரத்து நெரிசல் நிறைந்த பகுதியாகும். இந்த இடத்தில் காந்தி ரோட்டில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்பது வாகன ஓட்டிகளின் நீண்ட நாள் கோரிக்கையாகும்.

இங்கே வேகத்தடை அமைத்தால் விபத்துக்கள் தவிர்க்கப்படும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது குறித்து நடவடிக்கை எடுத்து வேகத்தடை அமைக்க வேண்டும் என்றார்.

மன்னார்குடியை சேர்ந்த சந்திரசேகரன் கூறியதாவது:-மன்னார்குடியில் பரபரப்பான சந்திப்புகளில் இந்த சந்திப்பும் ஒன்றாகும். காந்தி ரோடு, பள்ளிகள் நிறைந்த பகுதி. அருகிலேயே அரசு ஆஸ்பத்திரி உள்ளது. மேலும் பள்ளி-கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் இந்த பகுதியை கடந்து தான் செல்ல வேண்டி உள்ளது. எனவே காந்தி ரோட்டில் வேகத்தடை அமைப்பது அனைவருக்கும் பாதுகாப்பான ஒன்றாக அமையும் என்றார்.


Next Story