கச்சிராயப்பாளையம் அருகேபஸ்சில் தவறவிட்ட நகையை திருடியவருக்கு வலைவீச்சு
கச்சிராயப்பாளையம் அருகே பஸ்சில் தவறவிட்ட நகையை திருடியவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி
கச்சிராயப்பாளையம்
கச்சிராயப்பாளையம் குளத்து மேட்டு தெருவை சேர்ந்தவர் விவேக்பாபு(வயது 35). இவர் தனது மனைவி பரமேஸ்வரியுடன்(26) பெரம்பலூர் சென்றார். பின்னர் பெரம்பலூரில் இருந்து தனியார் பஸ்சில் கச்சிராயப்பாளையம் வந்து இறங்கினார். அப்போது பரமேஸ்வரி, தான் கொண்டு வந்திருந்த பையை பஸ்சிலேயே தவற விட்டு விட்டு வீட்டுக்கு சென்றார். அந்த பையில் 9¼ பவுன் நகை, வெள்ளி கொலுசு ஆகியவை இருந்தது.
இதற்கிடையே வீட்டுக்கு வந்து பார்த்தபோது, பை இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே பஸ் நிலையத்துக்கு சென்று, அங்கிருந்த பஸ்சை சோதனை செய்த போது பையை காணவில்லை. அதை யாரோ திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் கச்சிராயப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை திருடியவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story