கடமலைக்குண்டு அருகே கனமழையால் தடுப்பணையில் தேங்கிய தண்ணீர்


கடமலைக்குண்டு அருகே  கனமழையால் தடுப்பணையில் தேங்கிய தண்ணீர்
x

கனமழை காரணமாக கடலைக்குண்டு அருகே உள்ள தடுப்பணையில் தண்ணீர் தேங்கியது

தேனி

கடமலை-மயிலை ஒன்றியத்தில் கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நேற்று மாலை 3 மணி அளவில் கனமழை கொட்டி தீர்த்தது. இந்த மழை சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக பெய்தது. இதனால் ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதற்கிடையே கடமலைக்குண்டு அருகே பாலுத்து ஓடையில் கடந்த 2 ஆண்டுகளுக்குப் பிறகு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கனமழை காரணமாக ஓடைகளில் கட்டப்பட்டுள்ள அனைத்து தடுப்பணைகளிலும் நீர் தேங்கி காணப்படுகிறது. மேலும் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து விவசாய கிணறுகளில் நீர்மட்டம் அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.


Related Tags :
Next Story