கிணத்துக்கடவு அருகே வாகனம் மோதி தொழிலாளி பலி


கிணத்துக்கடவு அருகே வாகனம் மோதி தொழிலாளி பலி
x
தினத்தந்தி 2 Jun 2023 2:30 AM IST (Updated: 2 Jun 2023 10:57 AM IST)
t-max-icont-min-icon

கிணத்துக்கடவு அருகே வாகனம் மோதி தொழிலாளி பலி

கோயம்புத்தூர்

கிணத்துக்கடவு

பொள்ளாச்சியை அடுத்த தேவம்பாடி வலசு அருகே செல்லாண்டி கவுண்டன் புதூரை சேர்ந்தவர் குமரன் (வயது 65). கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு கிணத்துக்கடவு அருகே உள்ள எஸ்.மேட்டுப்பாளையம் பிரிவு அருகில் உள்ள திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கோவில்பாளையம் பகுதியில் உள்ள நான்கு வழிச்சாலையில் யுடேர்ன் பகுதியில் சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் குமரன் மீது பலமாக மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த குமரனை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு குமரனுக்கு டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு குமரன் உடலை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலே இருந்ததாக தெரிவித்தனர். இறந்த குமரனுக்கு அய்யம்மாள் என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர்.இதுகுறித்து கிணத்துக்கடவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story