கோபி அருகேவேன் மோதி தியேட்டர் ஊழியர் பலி


கோபி அருகேவேன் மோதி தியேட்டர் ஊழியர் பலி
x

கோபி அருகே வேன் மோதி தியேட்டர் ஊழியர் பலியானாா்

ஈரோடு

கோபி அருகே வேன் மோதி தியேட்டர் ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தியேட்டர் ஊழியர் சாவு

புஞ்சைபுளியம்பட்டியை சேர்ந்தவர் பாலன் (வயது 65). இவர் கோபி அருகே கொளப்பலூரில் உள்ள ஒரு சினிமா தியேட்டரில் ஊழியராக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் கொளப்பலூர் குன்னத்தூர் ரோட்டில் பாலன் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த வேன் ஒன்று பாலன் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

வழக்குப்பதிவு

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சிறுவலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பாலனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் விபத்தை ஏற்படுத்தியதாக வேனை ஓட்டி வந்த கோபியைச் சேர்ந்த சுப்பிரமணியன் (23) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பாலனின் மனைவி ஏற்கனவே இறந்துவிட்டார்.


Next Story