கொடுமுடி அருகே ரெயில்வே கேட்டில் மர்ம விலங்கு நடமாட்டம்


கொடுமுடி அருகே  ரெயில்வே கேட்டில் மர்ம விலங்கு நடமாட்டம்
x

கொடுமுடி அருகே ரெயில்வே கேட்டில் மர்ம விலங்கு நடமாட்டம் காணப்பட்டது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.

ஈரோடு

கொடுமுடி

கொடுமுடி அருகே ரெயில்வே கேட்டில் மர்ம விலங்கு நடமாட்டம் காணப்பட்டது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.

ரெயில்வே கேட்

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே சோளக்காளிபாளையம் கிராமம் உள்ளது. இங்கிருந்து பழைய சோளக்காளிபாளையத்துக்கு செல்லும் ரோட்டின் இடையே ரெயில்வே கிராசிங் ஒன்று உள்ளது. இந்த ரெயில்வே கிராசிங் உள்ள பகுதியில் ரெயில்வே கேட் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த ரெயில்வே கேட் பகுதியில் நேற்று முன்தினம் இரவு நேர பணியில் கோபு குமார் என்பவர் இருந்து உள்ளார்.

மர்ம விலங்கு

இரவு 8.30 மணி அளவில் அங்குள்ள ரெயில்வே பாதையை மர்ம விலங்கு ஒன்று கடந்து சென்றது. அந்த விலங்கை கண்டதும் அச்சத்தில் கோபு குமார் உறைந்து போனார். உடனே அவர் சுதாரித்துக்கொண்டு அந்த மர்ம விலங்கை தன்னிடம் இருந்த செல்போன் மூலம் புகைப்படம் எடுத்தார். பின்னர் அந்த மர்ம விலங்கானது ரெயில்வே தண்டவாள பகுதியை கடந்து அருகில் உள்ள கரும்பு தோட்டத்துக்குள் சென்று மறைந்து கொண்டது.

இந்த தகவல் கொடுமுடி பகுதியில் தீயாக பரவியது. இதனால் அது காட்டு பூனையாக இருக்குமா? அல்லது சிறுத்தை போன்ற வனவிலங்காக இருக்குமா? என பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

மேலும் இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்து உள்ளனர்.


Next Story