கோத்தகிரி அருகே அரசு பஸ், கார் நேருக்கு நேர் மோதல்- 2 பேர் படுகாயம்


கோத்தகிரி அருகே அரசு பஸ், கார் நேருக்கு நேர் மோதல்-  2 பேர் படுகாயம்
x

கோத்தகிரி அருகே அரசு பஸ், கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

நீலகிரி

கோத்தகிரி

கோத்தகிரி கேரடாமட்டம் பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் மகாலிங்கம், ரவி, மணிகண்டன், உதயகுமார், சுந்தரலிங்கம், மோகன்தாஸ் ஆகிய 6 பேர் பணிக்குச் செல்வதற்காக கோத்தகிரியில் இருந்து ஊட்டிக்கு காரில் சென்று கொண்டிருந்தனர். காரை மகாலிங்கம் ஒட்டினார். கார் வெஸ்ட்புரூக் அருகே சென்று கொண்டிருக்கும் போது எதிரே ஊட்டியில் இருந்து கோத்தகிரி நோக்கி வந்த அரசு பஸ் முன்னால் சென்ற பொக்லைன் வாகனத்தை முந்திச் செல்ல முயன்றது. அப்போது, எதிர்பாராத விதமாக அரசு பஸ்சும், காரும் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் காரில் பயணித்த ரவி, மகாலிங்கம் ஆகிய 2 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மற்றவர்கள் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். இது குறித்து கோத்தகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து, பஸ் டிரைவர் முருகன் மற்றும் கார் டிரைவர் மகாலிங்கம் ஆகியோரி டம் விபத்து காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story