கொட்டாம்பட்டி அருகே களை கட்டிய மீன்பிடி திருவிழா


கொட்டாம்பட்டி அருகே களை கட்டிய மீன்பிடி திருவிழா
x

கொட்டாம்பட்டி அருகே மீன்பிடி திருவிழாவில் மீன்களை பிடித்து கிராம மக்கள் உற்சாகம் அடைந்தனர்.

மதுரை

கொட்டாம்பட்டி,


.

மீன்பிடி திருவிழா

கொட்டாம்பட்டி அருகே உள்ள மாங்குளப்பட்டியில் பாரம்பரியமிக்க மீன்பிடி திருவிழா நடைபெற்றது. அங்குள்ள கண்மாயில் தண்ணீர் குறைந்து விட்டதால் மீன்பிடி திருவிழா நடத்த முடிவு செய்து பக்கத்து கிராமங்களுக்கு ஒலி பெருக்கி மூலமாக தகவல் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து 10-க்கும் மேற்பட்ட கிராமத்தினர் அதிகாலையிலேயே கண்மாய்க்கு வந்தனர். கிராம முக்கியஸ்தர்கள் அங்குள்ள கோவிலில் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.

விற்க மாட்டார்கள்

பின்னர் கண்மாய் கரையில் நின்று வெள்ளை வீசியதை தொடர்ந்து பொதுமக்கள் மீன்பிடி உபகரணங்களான கச்சா, வலை, ஊத்தா உள்ளிட்டவைகளை கொண்டு கண்மாய்க்குள் இறங்கினர். அப்போது நாட்டுவகை மீன்களான கட்லா, ரோகு, கெண்டை, விரால் உள்ளிட்ட மீன்களை பிடித்து உற்சாகமடைந்தனர்.

பிடித்த மீன்களை யாரும் விற்பனை செய்ய மாட்டார்கள். அவரவர் வீட்டில் சமைத்து இறைவனுக்கு படைத்த பின்னர் உண்ணுவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோன்று மீன்பிடி திருவிழா நடத்துவதால் வருடந்தோறும் நல்லமழை பொழிந்து விவசாயம் செழிக்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது.


Next Story