கோவில்பட்டி அருகே பஸ்சில் இருந்து தவறி விழுந்த மாணவி படுகாயம்


கோவில்பட்டி அருகே   பஸ்சில்   இருந்து தவறி விழுந்த மாணவி படுகாயம்
x

கோவில்பட்டி அருகே பள்ளிக்கூட பஸ்சில் இருந்து தவறி விழுந்த மாணவி படுகாயம் அடைந்த சம்பவம் குறித்து தாசில்தார் விசாரணை நடத்தினார்.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி அருகே பள்ளிக்கூட பஸ்சில் சென்ற மாணவி, திடீெரன கீழே தவறி விழுந்து படுகாயம் அடைந்தார். இதுகுறித்து தாசில்தார் விசாரணை நடத்தினார்.

பஸ்சிலிருந்து விழுந்த மாணவி

கோவில்பட்டி அருகே உள்ள தொட்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இளையராஜா மகள் ரதிமா (வயது10). இவர் கோவில்பட்டி யிலுள்ள தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் நேற்று காலையில் அந்த பள்ளியின் வாகனத்தில் ஊரிலிருந்து பள்ளிக்கு வந்துள்ளார்.

கோவில்பட்டி அருகே உள்ள முடுக்கலான்குளம் பகுதியில் உள்ள வளைவில் பஸ் திரும்பும் போது அவசர வழி பகுதி திடீரென திறந்ததால், அப்பகுதியில் அமர்ந்திருந்த ரதிமா கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். மாணவர்களின் கூச்சலை தொடர்ந்து உடனடியாக டிரைவர் ஆட்கொண்ட சுந்தரம்

( 67), மாணவியை மீட்டு கோவில்பட்டி யில் உள்ள தனியார் மருத்துவ மனையில் அனுமதித்தார். அங்கு மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தாசில்தார் விசாரணை

தகவல் அறிந்ததும் கோவில்பட்டி தாசில்தார் சுசிலா தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவி ரதிமாவை சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தார்.

மாணவிக்கு அளிக்கப்பட்டுள்ள சிகிச்சை குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார். இது குறித்து கொப்பம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story