மதுரை அருகே ரெயில்முன் பாய்ந்து பெண் போலீஸ்-2 குழந்தைகள் தற்கொலை- உடல் சிதறி பலியான பரிதாபம்


மதுரை அருகே ரெயில்முன் பாய்ந்து பெண் போலீஸ்-2 குழந்தைகள் தற்கொலை- உடல் சிதறி பலியான பரிதாபம்
x
தினத்தந்தி 22 Sept 2023 5:43 AM IST (Updated: 22 Sept 2023 10:16 AM IST)
t-max-icont-min-icon

ரெயில் முன்பு பாய்ந்து 2 குழந்தைகளுடன் பெண் போலீஸ் தற்கொலை செய்து கொண்டார். இதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மதுரை

வாடிப்பட்டி,

ெரயில் முன்பு பாய்ந்து 2 குழந்தைகளுடன் பெண் போலீஸ் தற்கொலை செய்து கொண்டார். இதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ரெயில் முன்பு பாய்ந்தார்

மதுரை திருப்பாலையை சேர்ந்தவர் சுப்புராஜ்(வயது 40). பெயிண்டர். இவருடைய மனைவி ஜெயலட்சுமி (37). இவர் மதுரை ெரயில்வே போலீஸ் நிலையத்தில் போலீசாக 10 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு காளிமுத்து ராஜா(9) என்ற மகனும், பவித்ரா(11) என்ற மகளும் இருந்தனர்.

இந்த நிலையில் நேற்று மாலை 5.45 மணிக்கு தனது மகன், மகளுடன் மதுரை சமயநல்லூர் அருகே தேனூர் மதுபான கடை எதிரில் உள்ள தண்டவாள பகுதிக்கு ஜெயலட்சுமி வந்தார். அப்போது அந்த வழியாக நெல்லையில் இருந்து திருச்சிக்கு ெரயில் சென்றது. இந்த ரெயில் முன்பு அவர் தனது 2 குழந்தைகளுடன் பாய்ந்தார்.

காரணம் என்ன?

இதில் சம்பவ இடத்திலேயே 3 பேரும் உடல் சிதறி பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்த தகவல் அறிந்த மதுரை ெரயில்வே போலீசார் அவர்களது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் ஜெயலட்சுமிக்கு திருச்சிக்கு பணி மாற்றம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மன அழுத்தத்தில் இருந்ததாகவும், அதன் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிகிறது.

இருப்பினும் அவர் தற்கொலை செய்து கொண்டதற்கு வேறு ஏதேனும் காரணம் இருக்குமா என போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் தற்கொலை செய்த தண்டவாள பகுதியில் ெஜயலட்சுமியின் உடல் மட்டுமே படுகாயங்களுடன் கிடந்தது. ஆனால், 2 குழந்தைகளின் உடல் பாகங்களில் சிலவற்றை மட்டுமே போலீசார் மீட்டனர். தூக்கி வீசப்பட்ட மற்ற பாகங்களை தேடும் பணி நேற்று இரவில் நீண்ட நேரம் வரை நீடித்தது.

பெண் போலீஸ் ஒருவர் தனது 2 குழந்தைகளுடன் ரெயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.


Next Story