மயிலாடும்பாறை அருகேவிவசாயியை கத்தியால் குத்திய 2 பேர் மீது வழக்கு
மயிலாடும்பாறை அருகே விவசாயியை கத்தியால் குத்திய 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
மயிலாடும்பாறை அருகே ஆத்துக்காடு கிராமத்தை சேர்ந்தவர் தவசிராஜா (வயது 47). விவசாயி. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள பாளையங்கோட்டையை சேர்ந்தவர் முருகன் (47). இவர்கள் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 15-ந்தேதி தவசிராஜா வீட்டுக்கு முருகன், அவரது மகன் ரஞ்சித்குமார் (18) ஆகியோர் சென்று அவரை தாக்கி, கத்தியால் குத்தினர். மேலும் அவர் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியையும் பறித்துக் கொண்டு சென்று விட்டனர். இதுகுறித்து தவசிராஜா ஆண்டிப்பட்டி மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் புகார் அளித்தார். புகாரை விசாரித்த கோர்ட்டு 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. அதன்பேரில் நேற்று முருகன், ரஞ்சித்குமார் ஆகிய 2 பேர் மீதும் கடமலைக்குண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.