மயிலாடும்பாறை அருகே கிணற்றில் தவறி விழுந்த பசு மீட்பு
மயிலாடும்பாறை அருேக கிணற்றில் தவறி விழுந்த பசு மீட்கப்பட்டது
தேனி
மயிலாடும்பாறை அருகே உள்ள செங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் நாகம்மாள். இவர், பசுமாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று நாகம்மாள் வழக்கம் போல் பசு மாடுகளை அருகில் உள்ள தனியார் தோட்டத்தில் மேய்ச்சலுக்காக விட்டிருந்தார். நேற்று மாலை மேய்ச்சலுக்கு விட்டிருந்த பசு ஒன்று எதிர்பாராதவிதமாக அங்கு இருந்த 40 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்தது. கிணற்றில் 30 அடிக்கு மேல் நீர் இருந்ததால் பசுவிற்கு காயங்கள் ஏற்படவில்லை. இருப்பினும் கிணற்றில் இருந்து மேலே ஏற முடியாமல் பசு நீரில் தத்தளித்துக் கொண்டிருந்தது. இதனை கண்ட அந்தப் பகுதி பொதுமக்கள் உடனடியாக மயிலாடும்பாறை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 3 மணி நேரம் போராடி கயிறு கட்டி பசுவை உயிருடன் மீட்டனர்.
Related Tags :
Next Story