மொடக்குறிச்சி அருகேகரும்பு தோட்டத்தில் தீ விபத்து
தீ விபத்து
ஈரோடு
மொடக்குறிச்சி அருகே உள்ள அய்யகவுண்டம்பாளையம் சாணார் மேடு பகுதியில் வசித்து வருபவர் அன்னக்கொடி (வயது47). இவர் அதே பகுதியில் சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் கரும்பு பயிரிட்டு இருந்தார். இதற்கு சொட்டு நீர் குழாய்கள் அமைத்து நீர் பாய்ச்சி வந்தார்.
இந்த நிலையில் நேற்று மதியம் 3 மணி அளவில் திடீரென்று கரும்பு தோட்டம் தீப்பிடித்து எரிய தொடங்கியது. உடனே இதுபற்றி மொடக்குறிச்சி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் கரும்புகள் மற்றும் சொட்டுநீர் குழாய்கள் முற்றிலும் எரிந்து நாசமானது.
இது குறித்து தகவல் அறிந்ததும் கிராம நிர்வாக அலுவலர் பாலகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் அங்கு சென்று சேத மதிப்பை ஆய்வு செய்தனர்.
Related Tags :
Next Story