மொடக்குறிச்சி அருகே மீட்கப்பட்ட பெண் குழந்தையை தகுந்த ஆவணங்களை கொடுத்து பெறலாம்; கலெக்டர் தகவல்
மொடக்குறிச்சி அருகே மீட்கப்பட்ட பெண் குழந்தையை தகுந்த ஆவணங்களை கொடுத்து பெறலாம் என்று கலெக்டர் கூறியுள்ளாா்.
மொடக்குறிச்சி அருகே பட்டாசுபள்ளி அண்ணா நகர் பகுதியில் உள்ள ஒரு தென்னந்தோப்பில் மோட்டார் அறையில் இருந்து கடந்த மாதம் 15-ந்தேதி பிறந்த ஒரு பெண் குழந்தை போலீஸ் துறை மூலம் மீட்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த குழந்தை ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு பிறகு ஈரோடு குழந்தைகள் நலக்குழுவில் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. எனவே இந்த குழந்தை பற்றி யாரேனும் உரிமை உள்ளவர்கள் தகுந்த ஆவணங்களுடன் செய்தி வெளியான 30 நாட்களுக்குள், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் 6-வது தளத்தில் உள்ள மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தையோ அல்லது 0424 2225010 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு குழந்தையை பெற்றுக்கொள்ளலாம். மேற்படி ஆட்சேபனை எதுவும் தெரியப்படுத்தப்படாத பட்சத்தில் சி.எ.ஆர்.எ. என்ற இணையத்தின் மூலம் பதிவு செய்து குழந்தையை தத்துக்கேட்டு விண்ணப்பித்து உள்ள பெற்றோருக்கு தத்துக்கொடுக்கப்படும். அதன்பிறகு குழந்தையை பெற இயலாது.
இத் தகவலை ஈரோடு கலெக்டர் கிருஷ்ண னுண்ணி ெவளி யிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்து உள்ளார்.