நாலாட்டின்புத்தூர் அருகேமோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி
நாலாட்டின்புத்தூர் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலியானார்.
நாலாட்டின்புத்தூர்:
நாலாட்டின்புத்தூர் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பரிதாபமாக பலியானார்.
தொழிலாளி
நாலாட்டின்புத்தூர் அருகே உள்ள கீழமங்கலம் தெற்கு தெருவை சேர்ந்த முத்துக்கருப்பன் மகன் சுரேஷ்(வயது 40). தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு கோவில்பட்டியில் இருந்து பசுவந்தனை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
காமநாயக்கன்பட்டியை அடுத்த குருவிநத்தம் விலக்கு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி சுரேஷ் கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை அப்பகுதி மக்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்ட பின்னர், மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டார்.
சாவு
அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் நேற்று பரிதாபமாக இறந்தார். இது குறித்து அவரது அண்ணன் கருப்பசாமி கொடுத்த புகாரின் பேரில் கொப்பம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்து போன சுரேஷிற்கு முத்துலட்சுமி (38) என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.