நெல்லிக்குப்பம் அருகே கத்தி, சூலத்தால் பூசாரியை தாக்க முயன்றவரால் பரபரப்பு


நெல்லிக்குப்பம் அருகே கத்தி, சூலத்தால் பூசாரியை தாக்க முயன்றவரால் பரபரப்பு
x
தினத்தந்தி 11 Aug 2023 12:15 AM IST (Updated: 11 Aug 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

நெல்லிக்குப்பம் அருகே கத்தி, சூலத்தால் பூசாரியை தாக்க முயன்றவரால் பரபரப்பு ஏற்பட்டது.

கோயம்புத்தூர்

நெல்லிக்குப்பம்,

நெல்லிக்குப்பம் அருகே காராமணிக்குப்பத்தில் உள்ள காளி கோவிலை நேற்று பூசாரி திறந்து வைத்து பூஜைக்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 45 வயதுடைய நபர் ஒருவர், கோவிலில் இருந்த கத்தி மற்றும் சூலத்தை எடுத்து பூசாரியை தாக்க முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த பூசாரி, அவரிடம் இருந்து லாவகமாக தப்பி, வெளியே ஓடினார்.

உடனே அந்த நபர், கோவில் இரும்பு கேட்டை பூட்டிக்கொண்டு உள்ளே அமர்ந்து கொண்டார். இது பற்றி தகவல் அறிந்ததும் நெல்லிக்குப்பம் போலீசார் விரைந்து வந்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர், கைலியை கழட்டி அரை நிர்வாணத்துடன் நின்று கொண்டு யாரும் உள்ளே வரக்கூடாது என்று சத்தமிட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

போலீசார் நடத்திய விசாரணையில் அவர், பாலூரை சேர்ந்த விஜயன் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் பிடித்து, உறவினர்களிடம் ஒப்படைத்தனர். விஜயன் மனநலம் பாதிக்கப்பட்டவரா?, எதற்காக கோவில் பூசாரியை தாக்க முயன்றார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story