ஊஞ்சலூர் அருகேபள்ளி மாணவி பாலியல் பலாத்காரம்பேரூராட்சி தலைவி உள்பட 3 பேர் கைது


ஊஞ்சலூர் அருகேபள்ளி மாணவி பாலியல் பலாத்காரம்பேரூராட்சி தலைவி உள்பட 3 பேர் கைது
x

ஊஞ்சலூர் அருகே பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் தொடா்பாக பேரூராட்சி தலைவி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனா்.

ஈரோடு

ஊஞ்சலூர்

ஊஞ்சலூர் அருகே ஆசைவார்த்தை கூறி பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இதுதொடர்பாக பேரூராட்சி தலைவி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

மாணவி பலாத்காரம்

ஈரோடு மாவட்டம் ஊஞ்சலூர் பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் மாணவியுடன் அதே பகுதிைய சேர்ந்த 18 வயது சிறுவன் பழகி உள்ளான். பின்னர் அந்த மாணவியிடம் ஆசைவார்த்தை கூறி சிறுவன் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த மாணவி 4 மாதம் கர்ப்பம் ஆனார்.

இதைத்தொடர்ந்து மாணவியின் கர்ப்பத்தை கலைக்க சிறுவனின் தாய், தந்தை, கிளாம்பாடி பேரூராட்சி தலைவி அமுதா மற்றும் பள்ளிக்கூட பெண் ஊழியர் சிவகாமி ஆகியோர் கொடுமுடி தனியார் ஆஸ்பத்திரிக்கு மாணவியை அழைத்து சென்றதாக தெரிகிறது. ஆனால் அவர்கள் கருக்கலைப்பு செய்ய மறுத்துவிட்டனர்.

3 பேர் கைது

மேலும் மாணவியை ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்து உள்ளனர். மாணவியின் பெற்றோருக்கு தெரியாமலேயே சிறுவனின் பெற்றோர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தெரியவந்ததும் மாணவியின் பெற்றோர் மலையம்பாளையம் போலீசில் புகார் அளித்தனர்.

அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் சிறுவன், சிறுவனின் தந்தை, தாய், பேரூராட்சி தலைவி அமுதா, பள்ளிக்கூட பெண் ஊழியர் சிவகாமி ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் சிறுவனின் தந்தை, தாய் மற்றும் பேரூராட்சி தலைவி அமுதா ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

சிறுவன் மற்றும் பள்ளிக்கூட ஊழியர் சிவகாமி ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் ஊஞ்சலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Related Tags :
Next Story