பண்ணாரி சோதனைச்சாவடி அருகேவாகன ஓட்டுனர்கள்- உரிமையாளர்கள் காத்திருப்பு போராட்டம்


பண்ணாரி சோதனைச்சாவடி அருகேவாகன ஓட்டுனர்கள்- உரிமையாளர்கள்  காத்திருப்பு போராட்டம்
x

பண்ணாரி சோதனைச்சாவடி அருகே வாகன ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு

சத்தியமங்கலம்

பண்ணாரி சோதனைச்சாவடி அருகே வாகன ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காத்திருப்பு போராட்டம்

சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரி சோதனைச்சாவடி அருகே அனைத்து வாகன ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் சார்பில் உரிமை மீட்பு காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்துக்கு சமூக நீதி அனைத்து வாகன ஓட்டுனர்கள் தொழிற்சங்கத்தின் ஒன்றிய தலைவர் நாகராஜ் தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு் கட்சியின் மாவட்ட நிர்வாகி ஸ்டாலின் சிவக்குமார் முன்னிலை வகித்தார்.

நல வாரியம்

போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள், ஓட்டுனர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும். ஓட்டுனரை தாக்கிய குவாலியார் ஆர்.டி.ஓ.வை பணி நீக்கம் செய்ய வேண்டும், காப்பீட்டை ஓட்டுனர் உரிமத்தோடு இணைக்க வேண்டும். ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும். தேசியநெடுஞ்சாலை கொள்ளையர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓட்டுனருக்கு தனி நல வாரியம் அமைக்க வேண்டும் ஆகியவை உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

கருப்பு பட்டை

போராட்டத்தில் சமூக நீதி அனைத்து வாகன ஓட்டுனர் சங்கத்தின் மாவட்ட தலைவர் ரமேஷ் கிருஷ்ணா, செயலாளர் மாரப்பன், சத்தியமங்கலம் சந்தன நகர மினி லாரி உரிமையாளர் சங்க தலைவர் சுரேஷ், செயலாளர் செந்தில்நாதன்.

சத்தியமங்கலம் லாரி உரிமையாளர்கள் சங்கம், சத்தியமங்கலம் கரும்பு லாரி மற்றும் டிராக்டர்கள் உரிமையாளர்கள் சங்கம், சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் உரிமையாளர் சங்கம் ஆகியவை உள்பட பல்வேறு சங்கங்களை சேர்ந்த உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் பலர் கருப்பு பட்டை (பேட்ச்) அணிந்து கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story