பெரியகுளம் அருகே சேதமடைந்த சாலையால் பரிதவிக்கும் வாகன ஓட்டிகள்


பெரியகுளம் அருகே  சேதமடைந்த சாலையால் பரிதவிக்கும் வாகன ஓட்டிகள்
x

பெரியகுளம் அருேக சேதமடைந்த சாலையால் வாகன ஓட்டிகள் பரிதவித்து வருகின்றனர்

தேனி

தேனியில் இருந்து திண்டுக்கல் செல்வதற்கு வடுகப்பட்டி வழியாக பைபாஸ் சாலை அமைக்கப்பட்டது. இந்நிலையில் பெரியகுளத்தை அடுத்த எ.புதுப்பட்டி அருகே திண்டுக்கல் சாலை இணைப்பு பகுதியில் பணிகள் இன்னும் முடிவடையாமல் உள்ளன. இந்த வழியாக ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இதற்கிடையே கடந்த சில நாட்களாக தேனி மாவட்டத்தில் கன மழை பெய்து வருகிறது.

இந்த மழையால் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறியது. இதனால் அந்த சாலையில் உள்ள பள்ளத்தில் மழை நீர் தேங்கி நிற்கிறது. இதையொட்டி அந்த வழியாக செல்லும் வாகனங்கள் பள்ளத்தில் தேங்கிய மழை நீரில் சிக்கி கொள்கின்றன. இந்நிலையில் இன்று அந்த வழியாக சென்ற வாகனங்கள் பள்ளத்தில் சிக்கி கொண்டன. இதனால் வாகனங்களை வெளியேற்ற முடியாமல் ஓட்டுனர்கள் பரிதவித்து வந்தனர். இதையடுத்து பொதுமக்கள் வாகனங்களை தள்ளி விட்டு வெளியேற்றினர். எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story