பெரியகுளம் அருகேஆட்டோ டிரைவருக்கு அரிவாள் வெட்டு:3 பேர் மீது வழக்கு


பெரியகுளம் அருகேஆட்டோ டிரைவருக்கு அரிவாள் வெட்டு:3 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 19 March 2023 12:15 AM IST (Updated: 19 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பெரியகுளம் அருகே ஆட்ேடா டிரைவரை அரிவாளால் வெட்டிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தேனி

பெரியகுளம் அருகே உள்ள டி.கள்ளிப்பட்டி நாகம்மாள் கோவில் தெருவை சேர்ந்தவர் சின்னு. இவரது மகன் கணேசன் (வயது 38). ஆட்டோ டிரைவர். இவரது அண்ணன்கள் முருகன், அழகுமலை. கணேசன், அவரது அண்ணன்கள் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் கணேசன் வீட்டின் அருகே நின்று கொண்டு இருந்தார்.

அப்போது அங்கு வந்த முருகன், அழகுமலை ஆகியோர் தகராறு செய்து கணேசனை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். மேலும் அழகுமலையின் மனைவி சின்னழகுவும் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த கணேசனை அக்கம்பக்கத்தினர் மீ்ட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனர். இதுகுறித்து அவர் தென்கரை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் முருகன், அழகுமலை, சின்னழகு ஆகிய 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Related Tags :
Next Story