கம்பம் அருகே குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
கம்பம் அருகே குழாய் உடைந்து குடிநீர் வீணாக செல்கிறது.
தேனி
கம்பம் அருகே உள்ள சுருளிப்பட்டி ஊராட்சிக்கு முல்லைப்பெரியாற்றில் உள்ள உறை கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் ஏற்றப்பட்டு வினியோகம் செய்யப்படுகிறது. இதேபோல் லோயர்கேம்ப் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் கம்பம் நகராட்சி பகுதி வழியாக சுருளிப்பட்டிக்கு குழாய் மூலம் தண்ணீர் கொண்டு வரப்படுகிறது.
இந்நிலையில் சுருளிப்பட்டியில் உள்ள முல்லைப்பெரியாற்று பாலத்தில் குழாய் உடைந்து தண்ணீர் வீணாக சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் தண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடுகிறது. எனவே குடிநீர் வீணாகுவதை தடுக்க, குழாய் உடைப்பை விரைந்து சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story