கம்பம் அருகே பாலத்தை இடித்து அகற்ற கோரிக்கை


கம்பம் அருகே   பாலத்தை இடித்து அகற்ற கோரிக்கை
x
தினத்தந்தி 14 Nov 2022 12:15 AM IST (Updated: 14 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கம்பம் அருகே பாலத்தை இடித்து அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேனி

கம்பம் அருகே காமயகவுண்டன்பட்டி பேரூராட்சி 15-வது வார்டில் அண்ணாபுரம் உள்ளது. இங்கு சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்கள் காமயகவுண்டன்பட்டி பேரூராட்சி, ரேஷன் கடைக்கு சின்னவாய்க்கால் பாலம் வழியாக சென்று வருகின்றனர். இந்த பாலம் இல்லையென்றால் கம்பம் வழியாக 10 கி.மீ சுற்றி செல்ல வேண்டும். இதை கடந்து தான் பல ஏக்கர் விவசாய நிலங்களுக்கும் செல்ல முடியும்.

நெல் அறுவடை காலங்களில் டிராக்டர், லாரி போன்ற வாகனங்கள் இந்த பாலம் வழியாக சென்று வருகின்றன. இந்நிலையில் பாலத்தில் உள்ள தடுப்புச்சுவர் இடிந்து விட்டது. மேலும் பாலம் வலுவிழந்து உடையும் சூழ்நிலையில் உள்ளது. எனவே விபத்து ஏற்படுவதற்கு முன்பு பாலத்தை இடித்து விட்டு புதிய பாலம் கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Related Tags :
Next Story