கம்பம் அருகே ரூ.6½ லட்சத்தில் சாலை அமைக்கும் பணி


கம்பம் அருகே  ரூ.6½ லட்சத்தில் சாலை அமைக்கும் பணி
x

கம்பம் அருகே ரூ.6½ லட்சத்தி்ல் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது

தேனி

மேற்குத்தொடர்ச்சி மலை அடிவார பகுதியான கம்பத்தில் இருந்து ஊத்துக்காடு, புதுப்பட்டி, அனுமந்தன்பட்டி, உத்தமபாளையம் மேற்கு பகுதி வழியாக கோம்பை வரை கடந்த 1998-ம் ஆண்டு சாலை அமைக்கப்பட்டது

இந்நிலையில் ஊத்துக்காடு புறவழிச்சாலை பிரிவில் இருந்து கோம்பை வரை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பராமரிப்பு பணிகள் செய்யப்பட்டு புதிதாக தார்சாலை அமைக்கப்பட்டது. ஆனால் கம்பம் நாக கன்னியம்மன் கோவில் பாலத்தில் இருந்து ஊத்துக்காடு புறவழிச்சாலை வரை எந்தவித பராமரிப்பு பணியும் மேற்கொள்ளாமல் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறியது.

இதனால் விவசாயிகள், பொதுமக்கள் அவதியடைந்து வந்தனர். இதையடுத்து பொதுமக்கள் கம்பம் எம்.எல்.ஏ ராமகிருஷ்ணனிடம் கோரிக்கை வைத்தனர். அதன்பேரில் கம்பம் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.6 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதனை அந்த பகுதி பொதுமக்கள் இனி்ப்பு வழங்கி கொண்டாடினர்.


Next Story