புதுக்கோட்டை அருகேகட்டிட தொழிலாளி இறந்த வழக்கில் 6 பேரிடம் விசாரணை
புதுக்கோட்டை அருகே கட்டிட தொழிலாளி இறந்த வழக்கில் 6 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
புதுக்கோட்டை அருகே உள்ள அல்லிகுளம் முருகன்நகரை சேர்ந்தவர் மகேந்திரபெருமாள் (வயது 23). கட்டிட தொழிலாளி. இவரது தந்தை முருகன். தாய் பூமாரி. தந்தை ஏற்கனவே இறந்து விட்டார். பூமாரி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் மகேந்திர பெருமாள் 2 நாட்களாக வீட்டுக்கு வரவில்லையாம். இதனால் பூமாரி புதுக்கோட்டை போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் வின்சென்ட் அன்பரசி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
இந்த நிலையில் அல்லிகுளம் காட்டுப்பகுதியில் மகேந்திரகுமார் உடல் அழுகிய நிலையில் கிடந்தது. இதனை தொடர்ந்து போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் மகேந்திரகுமார் அடித்துக் கொலை செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அதன் பேரில் 6 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.