ரிஷிவந்தியம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; வாலிபர் பலி


ரிஷிவந்தியம் அருகே  மோட்டார் சைக்கிள்கள் மோதல்; வாலிபர் பலி
x
தினத்தந்தி 15 Nov 2022 12:15 AM IST (Updated: 15 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

ரிஷிவந்தியம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் வாலிபர் உயிாிழந்தாா்.

கள்ளக்குறிச்சி

ரிஷிவந்தியம்,

ரிஷிவந்தியம் அடுத்த பிரிவிடையாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் நந்தகோபால் மகன் கார்த்தி (வயது 28). இவர் நேற்று முன்தினம் தனது மோட்டார் சைக்கிளில் கெடிலம் கூட்டுரோடு நோக்கி சென்று கொண்டிருந்தார். பாளையம் பஸ் நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தபோது, இவரது மோட்டார் சைக்கிளும், எதிரே வந்த மோட்டார் சைக்கிளும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் கார்த்தி மற்றும் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த காட்டு செல்லூர் கிராமத்தை சேர்ந்த தினேஷ், சிபிராஜ் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். இவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கார்த்தி பரிதாபமாக உயிரிழந்தார். இதற்கிடையே மேல்சிகிச்சைக்காக தினேஷ் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும், சிபிராஜ் சென்னை மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story