சாத்தான்குளம் அருகே'மாற்றத்தை தேடி' விழிப்புணர்வு நிகழ்ச்சி


சாத்தான்குளம் அருகேமாற்றத்தை தேடி விழிப்புணர்வு நிகழ்ச்சி
x
தினத்தந்தி 4 Sep 2023 6:45 PM GMT (Updated: 4 Sep 2023 6:46 PM GMT)

சாத்தான்குளம் அருகே ‘மாற்றத்தை தேடி’ விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

தூத்துக்குடி

தட்டார்மடம்:

சாத்தான்குளம் அருகேயுள்ள வள்ளியம்மாள்புரம் கிராமத்தில் சாத்தான்குளம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாமா பத்மினி தலைமையிலான போலீசார், மாற்றத்தை தேடி விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர். இந்த நிகழ்ச்சியில், பெண்கள் பாதுகாப்புக்கான சட்டங்கள், போக்சோ சட்டம், போதைப்பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், கிராமத்தில் சாதிய அடையாளங்களை அழித்து சாதி, மத பிரச்சினைகளுக்கு இடம் கொடுக்க மாட்டோம் என்று பொதுமக்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.


Next Story