செய்துங்கநல்லூர் அருகேகொலைவழக்கில் கைதான 6 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


செய்துங்கநல்லூர் அருகேகொலைவழக்கில் கைதான 6 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 4 Sept 2023 12:15 AM IST (Updated: 4 Sept 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

செய்துங்கநல்லூர் அருகே கொலைவழக்கில் கைதான 6 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

தூத்துக்குடி

செய்துங்கநல்லூர் அருகே கொலைவழக்கில் கைதான 6 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

கொலை வழக்கு

செய்துங்கநல்லூர் அருகே உள்ள கால்வாய் பகுதியை சேர்ந்தவர் சுடலை. இவருடைய மகன் மாயாண்டி (வயது 33). இவரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த வழக்கில் கால்வாய் சுடலை கோவில் தெருவை சேர்ந்த சுடலைகண்ணு மகன்கள் இசக்கிபாண்டி (50), ஆறுமுகம் (43), அர்ஜூனன் (44), மாதா கோவில் தெருவை சேர்ந்த காசிபாண்டியன் மகன் செல்வம் (27), ஸ்ரீவைகுண்டம் பத்மநாபமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர்களான வீரபுத்திரன் மகன் அங்கப்பன் (53) மற்றும் முத்துபலவேசம் மகன் தேவா என்ற தேவராஜ் (21) ஆகிய 6 பேரையும் செய்துங்கநல்லூர் போலீசார் கைது செய்தனர். இவர்கள் 6 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பரிந்துரை செய்தார்.

குண்டர் சட்டம்

அதன் பேரில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் இசக்கிபாண்டி, ஆறுமுகம், அர்ஜூனன், செல்வம், அங்கப்பன், தேவா என்ற தேவராஜ் ஆகிய 6 பேரையும் கைது செய்ய உத்தரவிட்டார். அந்த உத்தரவு நகலை செய்துங்கநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மநாபபிள்ளை பாளையங்கோட்டை ஜெயிலில் வழங்கினார். நடப்பு ஆண்டில் இதுவரை போக்சோ வழக்கில் ஈடுபட்ட 13 பேர், போதை பொருள் கடத்தல் வழக்கில் ஈடுபட்ட 8 பேர் உள்பட 112 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளனர்.


Next Story