சிவகிரி அருகேகுளத்தில் மூழ்கி சிறுமி சாவு


சிவகிரி அருகேகுளத்தில் மூழ்கி சிறுமி சாவு
x
தினத்தந்தி 20 Feb 2023 2:35 AM IST (Updated: 20 Feb 2023 3:37 AM IST)
t-max-icont-min-icon

சிவகிரி அருகே குளத்தில் மூழ்கி சிறுமி இறந்தார்.

ஈரோடு

சிவகிரி

சிவகிரி அருகே குளத்தில் மூழ்கி சிறுமி இறந்தார்.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

காணவில்லை

கொடுமுடி அருகே உள்ள ஆவுடையார்பாறை பகுதியை சேர்ந்தவர் சங்கர். இவருடைய மனைவி சாந்தி. இவர்களுடைய 3-வது மகள் ஜீவிதா (வயது 9).

கடந்த சில நாட்களாக சிவகிரி அருகே உள்ள பழமங்கலம் பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டில் ஜீவிதா இருந்து வந்து உள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த ஜீவிதாவை காணவில்லை.

சாவு

இதனால் அவரை உறவினர்கள் பல இடங்களில் தேடி பார்த்தனர். அப்போது அங்குள்ள ஒரு குளத்தின் கரையில் ஜீவிதாவின் செருப்பு இருந்ததை கண்டனர். உடனே குளத்தில் இறங்கி ஜீவிதாவை உறவினர்கள் தேடினர். அப்போது தண்ணீரில் மூழ்கிய நிலையில் மயங்கியபடி ஜீவிதா கிடந்து உள்ளார். உடனே ஜீவிதாவை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக சிவகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே ஜீவிதா இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சிவகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் ஜீவிதாவின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கொடுமுடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.


Next Story