ஸ்பிக் நகர் அருகேஅரசு பஸ் கண்ணாடி உடைப்பு :வாலிபர் கைது
ஸ்பிக் நகர் அருகே அரசு பஸ் கண்ணாடியை கல்வீதிதாக்கி உடைத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
ஸ்பிக்நகர்:
நாசரேத்தில் இருந்து தூத்துக்குடி நோக்கி நேற்று முன்தினம் இரவு அரசு பஸ் சென்றுகொண்டிருந்தது. பஸ்சை நெல்லையை சேர்ந்த டிரைவர் பத்மநாபன் (வயது59) என்பவர் ஓட்டிவந்தார். பஸ் முள்ளக்காடு, ஸ்பிக்நகர் இடையே டேக்நகர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவர், திடீரென அந்த பஸ் மீது கல்வீசி தாக்கினார். இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்து சேதமானது. மேலும் பஸ் டிரைவர் மற்றும் முன்பகுதியில் பயணம் செய்த பயணிகள் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதுகுறித்து பஸ் டிரைவர் கொடுத்த புகாரின்பேரில் முத்தையாபுரம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சேட்டைநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, பஸ் மீது குடிபோதையில் கல்வீசி தாக்கிய முத்தையாபுரம் தங்கமணி நகரை சேர்ந்த பூமிநாதன் மகன் விஜயராகவன் என்ற லாசர் டேவிட் (22) என்பவரை கைது செய்தார்.