தாளவாடி அருகே ரோட்டில் குட்டியுடன் உலா வந்த காட்டு யானை


தாளவாடி அருகே ரோட்டில் குட்டியுடன் உலா வந்த காட்டு யானை
x

தாளவாடி அருகே ரோட்டில் குட்டியுடன் காட்டு யானை உலா வந்தது.

ஈரோடு

தாளவாடி

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் தாளவாடி வனச்சரகத்துக்குட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் காணப்படுகின்றன. உணவு மற்றும் தண்ணீர் தேடி காட்டு யானைகள் அங்குள்ள ரோட்டை கடந்து செல்வதும், ரோட்டில் உலா வருவதும் தொடர்கதையாகி வருகிறது.

இந்த நிலையில் தாளவாடி வனப்பகுதியில் இருந்து குட்டியுடன் காட்டு யானை ஒன்று வெளியேறியது. பின்னர் அந்த காட்டு யானை தாளவாடியில் இருந்து தலமலை செல்லும் ரோட்டில் சிக்கள்ளி அருகே ரோட்டில் உலா வந்தது. சிறிது நேரம் வரை அந்த ரோட்டிலேயே குட்டியுடன் வந்த காட்டு யானை, பின்னர் வனப்பகுதிக்குள் சென்றது. இதை அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் தங்களுடைய செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், 'அடிக்கடி யானைகள் ரோட்டை கடந்து செல்வதால் வாகன ஓட்டிகள் மிகவும் கவனமாக செல்ல வேண்டும்,' என அறிவுறுத்தி உள்ளனர்.


Related Tags :
Next Story