தாளவாடி அருகே கும்கி யானையை காண குவிந்த பொதுமக்கள்
தாளவாடி அருகே கும்கி யானையை காண பொதுமக்கள் குவிந்தனா்.
தாளவாடி
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஜீர்கள்ளி வனச்சரகத்துக்கு உள்பட்டது திகனாரை, கரளவாடி, மல்லன்குழி, ஜோரகாடு பகுதி. இங்குள்ள வனப்பகுதியில் இருந்து கருப்பன் என்ற ஒற்றை யானை வெளியேறி அருகே உள்ள விவசாய தோட்டங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியும், மனிதர்களை தாக்கியும் வருகின்றன. எனவே அந்த யானையை பிடிக்க பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இருந்து அரிசி ராஜா மற்றும் கபில்தேவ் என்ற 2 கும்கி யானைகள் கடந்த 3 நாட்களுக்கு முன்பு தாளவாடி அருகே உள்ள ஜோரகாடு பகுதிக்கு கொண்டுவரபட்டது.
இந்தநிலையில் நேற்று ஆங்கில புத்தாண்டு விடுமுறை நாள் என்பதால் அந்த கும்கி யானையை காண தாளவாடி சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குழந்தைகளுடன் அங்கு குவிந்தனர். ஆனால் வனத்துறையினர் யாரையும் அருகில் செல்ல அனுமதிக்கவில்லை. சுமார் 300 மீட்டர் தூரத்தில் இருந்து யானையை பார்த்து செல்பி எடுத்து பொதுமக்கள் மகிழ்ந்தனர். காலை முதல் மாலை வரை பொதுமக்கள் ஆவலுடன் வந்து கும்கி யானையை பார்த்து சென்றனர்.