தட்டார்மடம் அருகே பேக்கரி உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை
தட்டார்மடம் அருகே பேக்கரி உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தட்டார்மடம்:
தட்டார்மடம் அருகே உள்ள புத்தன்தருவை அம்மன்கோவில் தெருவை சேர்ந்த லட்சுமணன் மகன் நீலராஜன் (வயது 28). இவர் பெரியதாழையில் பேக்கரி கடை நடத்தி வந்தார். இவர் சிலரிடம் கடன் வாங்கியிருந்துள்ளார். கடன் கொடுத்தவர்கள் திரும்ப கேட்டு வந்துள்ளனர். அவர்களுக்கு கடனை திரும்ப செலுத்த முடியாமல் அவர் மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 11-ந்தேதி முருங்கை மரத்திற்கு வைத்திருந்த பூச்சி மருந்து குடித்து வீட்டில் மயங்கி விழுந்தார். குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு திசையன்விளை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நீலராஜன், பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தட்டார்மடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.