தட்டார்மடம் அருகேவிவசாயி தற்கொலை


தட்டார்மடம் அருகேவிவசாயி தற்கொலை
x
தினத்தந்தி 5 Aug 2023 12:15 AM IST (Updated: 5 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தட்டார்மடம் அருகே விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.

தூத்துக்குடி

தட்டார்மடம்:

தட்டார்டம் அருகே புத்தன்தருவை பெரிய தெருவை சேர்ந்தவர் குமாரசாமி. இவருக்கு கந்தசாமி (38) உள்பட 4 மகன்கள் உண்டு. இதில் கந்தசாமி, விவசாய பணியில் ஈடுபட்டு பெற்றோரை கவனித்து வந்துள்ளார். இந்த நிலையில் குமாரசாமியும், அவரது மனைவியும் உடல்நலம் பாதிக்கப்பட்டு கடந்த 2 மாதத்திற்கு முன்பு அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர். இதனால் கந்தசாமி மனமுடைந்து போயிருந்துள்ளார். அடிக்கடி பெற்றோரின் போட்டோவை பார்த்து கதறி அழுது வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் கந்தசாமி, வயலுக்கு தெளிக்கும் பூச்சி மருந்து குடித்து மயங்கி விழுந்தார். குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு திசையன்விளையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை ெசய்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து தட்டார்மடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story