தட்டார்மடம் அருகேடீக்கடைக்காரர் தூக்குபோட்டு தற்கொலை


தட்டார்மடம் அருகேடீக்கடைக்காரர் தூக்குபோட்டு தற்கொலை
x
தினத்தந்தி 28 Sept 2023 12:15 AM IST (Updated: 28 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தட்டார்மடம் அருகே டீக்கடைக்காரர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தூத்துக்குடி

தட்டார்மடம்:

தட்டார்மடம் அருகே கடன் தொல்லையால் மனமுடைந்த டீக்கடைக்காரர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

டீக்கடைக்காரர்

தட்டார்மடம் அருகேயுள்ள அதிசயபுரம் மேலத்தெருவை சேர்ந்தவர் சுவாமிதாஸ் செல்வராஜ் (வயது 54). இவர் திசையன்விளை அருகே உவரி கோவில் பகுதியில் டீக்கடை நடத்தி வந்தார். இத்தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால், வாழ்வாதாரத்திற்காக தனியார் நிறுவனத்தில் கடன் வாங்கியுள்ளார். அந்த கடனை திரும்ப செலுத்த முடியாமல் அவதிக்குள்ளாகி வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கலைஞர் பெண்கள் உரிமைத்தொகை விண்ணப்ப மையத்திற்கு சென்று வருவதாக குடும்பத்தினரிடம் கூறிவிட்டு, வீட்டிலிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். ஆனால் அன்று இரவு வரை அவர் வீடு திரும்பவில்லை.

தூக்கில் பிணம்

அவரை குடும்பத்தினர் தேடிவந்தனர். இந்தநிலையில் நேற்று காலையில் அதிசயபுரம் கல்லறை தோட்டத்தில் உள்ள ஆலமரத்தில் அவர் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த தட்டார்மடம் போலீசார் அப்பகுதிக்கு சென்று தூக்கில் தொங்கி கொண்டிருந்த அவரது உடலை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து அவரது மனைவி சித்திரைக்கலா கொடுத்த புகாரின் பேரில் தட்டார்மடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு மற்றும் போலீசார் வழக்குப்பதிவு ெசய்து விசாரணை நடத்தினர். இதில், அவர் தொழிலில் நஷ்டம் மற்றும் கடன் தொல்லையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்ததாக போலீஸ் தரப்பில் ெதரிவிக்கப்பட்டது.


Next Story