தேனி பஸ் நிலையம் அருகேதூக்கில் தொங்கிய ஆண் பிணம்:போலீசார் விசாரணை
தேனி பஸ் நிலையம் அருகே தூக்கில் ஆண் பிணம் தொங்கியது.
தேனி புதிய பஸ் நிலையத்தில் திருப்பூர் பஸ்கள் நிற்கும் பகுதியில் இருந்து சிப்கோ செல்லும் பாதையோரம் ஒரு மரத்தில் நேற்று அதிகாலை ஆண் பிணம் தூக்கில் தொங்கிக் கொண்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் தேனி போலீசார் அங்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அங்கு 45 வயது மதிக்கத்தக்கவர், ஒரு மரத்தில் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்த நிலையில் பிணமாக கிடந்தார்.
அவர் சிவப்பு நிற டி-சர்ட், நீல நிற கைலி அணிந்து இருந்தார். இடது கையில், பா.மகேஸ்வரி என்ற பெயரை பச்சை குத்தியிருந்தார். இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. இதையடுத்து பிணத்தை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் குமரேசன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.