தேனி அருகேவீட்டை விற்க முயன்ற பெண்ணுக்கு கொலை மிரட்டல்:துணை ராணுவ வீரர் கைது
தேனி அருகே வீட்டை விற்க முயன்ற பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த துணை ராணுவ வீரரை போலீசார் கைது செய்தனர்.
வீட்டை விற்க முயற்சி
தேனி அருகே ஆதிப்பட்டியை சேர்ந்தவர் சரவணக்குமார். இவரது மனைவி நாகலட்சுமி (வயது 36). இவர் தனது கடன் பிரச்சினை காரணமாக ஆதிப்பட்டியில் உள்ள தனது வீட்டை விற்க முயன்றார். அந்த வீட்டை போடி வடக்கு தெருவை சேர்ந்த செல்வம் மனைவி ரதிபிரியா என்பவரிடம் விற்பனைக்கு பேசினார்.
செல்வம் காஷ்மீரில் துணை ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். கடந்த மாதம் அவர் விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார்.
ராணுவ வீரர் கைது
இந்நிலையில், நாகலட்சுமியின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து அவரிடம் செல்வம் தகராறு செய்ததாக தெரிகிறது. மேலும், அந்த வீடு வேண்டாம் என்று, கூறியதோடு, ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் நாகலட்சுமி புகார் செய்தார். அதன்பேரில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வத்தை நேற்று கைது செய்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டை விற்க முயன்ற பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த துணை ராணுவ வீரர் கைதான சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.