தேவாரம் அருகே நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
தேவாரம் அருகே நீாநிலைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன
தேனி
தேவாரம் அருகே ரெங்கநாதபுரம் ஊராட்சியில் நீர்நிலைகள் மற்றும் ஓடை பகுதிகளை தனியார் சிலர் ஆக்கிரமிப்பு செய்து தென்னை மரங்களை நட்டு விவசாயம் செய்து வந்தனர். இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரனிடம் மனு கொடுத்தனர். இதையடுத்து கலெக்டர் உத்தரவின் பேரில் உத்தமபாளையம் தாசில்தார் அர்சுணன் தலைமையில் வருவாய்த்துறையினர் அரசு நிலங்கள் குறித்து சர்வே செய்தனர். அப்போது நீர்நிலை, ஓடைகள், அரசு நிலங்களை ஆக்கிரமிப்பு செய்து இருந்தது தெரியவந்தது. இதையடுத்து பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. அப்போது உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அதிகாரி ஜெயகாந்தன், தே.ரெங்கநாதபுரம் ஊராட்சி மன்ற தலைவர் வசந்தி சிவசூரியன் மற்றும் வருவாய்த்துறையினர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story