திருவெண்ணெய்நல்லூர் அருகே 15 ஆடுகள் திருட்டு


திருவெண்ணெய்நல்லூர் அருகே  15 ஆடுகள் திருட்டு
x
தினத்தந்தி 29 Sept 2022 12:15 AM IST (Updated: 29 Sept 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருவெண்ணெய்நல்லூர் அருகே 15 ஆடுகள் திருடுபோனது.

விழுப்புரம்

திருவெண்ணெய்நல்லூர்,

திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள ஆனத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 55). இவர் 32 ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் வழக்கம் போல், ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டார். பின்னர் மாலையில் வீட்டின் பின்புறம் உள்ள பட்டியில் 32 ஆடுகளையும் அடைத்து வைத்து விட்டு, வீட்டுக்கு தூங்க சென்றார். பின்னர் நேற்று காலையில் வந்து பார்த்தபோது பட்டியில் அடைத்து வைத்திருந்த 15 ஆடுகளை காணவில்லை. அவற்றை யாரோ மர்மநபர்கள் திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது.

இந்த நிலையில் நேற்று உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற ஆட்டுச்சந்தைக்காக ஆடுகளை திருடி இருக்கலாம் என்று சந்தேகம் அடைந்த சுப்பிரமணியன் தனது மகனுடன் சென்று அங்கு பார்த்தார். ஆனால் அங்கு சுப்பிரமணியனின் ஆடுகள் எதுவும் இல்லை. இதுகுறித்த புகாரின்பேரில் திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் வழக்குப்பதிவு செய்து ஆடு திருடியவர்களை தேடி வருகிறார்.


Next Story