திருச்செந்தூர் அருகேமோட்டார் ைசக்கிள் திருடிய வாலிபர் கைது
திருச்செந்தூர் அருகே மோட்டார் ைசக்கிள் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் அருேகயுள்ள தோப்பூர் பகுதியை சேர்ந்த சந்திரசேகர் மகன் மாதவன் (வயது 32). இவர் கடந்த 5-ந் தேதி சண்முகபுரம் பகுதியில் உள்ள செல்போன் கடை முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தியிருந்தார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளை காணவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் திருச்செந்தூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளிதரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். இதில், தூத்துக்குடி பிரையண்ட் நகரை சேர்ந்த தனுஷ்கோடி மகன் கார்த்திக் (22) என்பவர் மாதவனின் மோட்டார் சைக்கிளை திருடியது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் அவரை கைது செய்து, அவரிடமிருந்து ரூ.2 லட்சம் மதிப்புள்ள மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட கார்த்திக் மீது தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் நிலையத்தில் திருட்டு உள்பட 14 வழக்குகளும், சிப்காட், தெர்மல்நகர், மத்திய பாகம் போலீஸ் நிலையத்தில் தலா ஒரு திருட்டு வழக்கு என மொத்தம் 17 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.