தூத்துக்குடி அருகே குப்பை கிடங்கில் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு


தூத்துக்குடி அருகே குப்பை கிடங்கில் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 9 July 2023 6:45 PM GMT (Updated: 10 July 2023 9:54 AM GMT)

தூத்துக்குடி அருகே குப்பை கிடங்கில் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி

ஸ்பிக்நகர்:

தூத்துக்குடி அருகே உள்ள அத்திமரப்பட்டியில் இருந்து புதுக்கோட்டை செல்லும் சாலையோரத்தில், மின்சார டிரான்ஸ்பாரம் அருகே பல ஆண்டுகளாக குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இந்த குப்பை கிடங்கில் நேற்று மாலை 3 மணியளவில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. அந்த நேரத்தில் பலத்த காற்று வீசியதால் குப்பையில் பற்றிய தீ வேகமாக பரவ தொடங்கியது. தீ பற்றி எரிந்ததால் அந்த பகுதியில் புகை மூட்டமாக இருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

நேரம் செல்லச்செல்ல புகை மூட்டம் அதிகரித்ததால், அந்த சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அந்த வழியாக செல்ல வேண்டிய வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. இதுகுறித்து தகவல் அறிந்த தெர்மல்நகர் தீயணைப்பு துறை அதிகாரி சகாயராஜ் தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் அந்த பகுதிக்கு விரைந்து வந்து நீண்டநேரம் போராடி தீ மேலும் பரவாமல் தடுத்து, தீைய முற்றிலுமாக அணைத்தனர். பின்னர் அந்த சாலையில் வாகன போக்குவரத்து மீண்டும் தொடங்கியது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.


Next Story